36ஆவது தியாகிகள் தினம் நினைவு தினம் தமிழர் பகுதிகளில் அனுஷ்டிப்பு
36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு நேற்று(19.06.2026) வடக்கு கிழக்கு தழுவிய தியாகிகள் தின நிகழ்வு திருகோணமலையிலும் க.பத்மநாபாவின் நினைவு தினமும் அனுஷ்டிக்கப்பட்டது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்போது, தீபம் ஏற்றப்பட்டு, உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதில், பொதுமக்கள் கட்சி போராளிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தொடருந்து, தியாகிகள் பற்றிய நினைவு பேருரையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

திருகோணமலை
36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தழுவிய ரீதியிலான தியாகிகள் தின நிகழ்வு நேற்று(19.06.2026) திருகோணமலையில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் (SDPT) அலுவலகத்தில் பக்திப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் வை. விக்கினேஸ்வரன் (கிருபா) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில், தியாகிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பிரதான பொதுச்சுடர் மற்றும் ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய நினைகூரல் நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் தியாகிகளின் அர்ப்பணிப்புக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலதிக தகவல் - கியாஸ் சஃபி