யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா (PHOTOS)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் - நான்காவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.இன்றைய அமர்வில், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பதிவாளர் வி.காண்டீபன், நிதியாளர் கே. சுரேஸ்குமார், பதில் நூலகர் எஸ்.கேதீஸ்வரன் மற்றும் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விருந்தினர்கள், பட்டம் பெறும் மாணவர்களின் சார்பில் அழைக்கப்பட்ட பெற்றோர் - விருந்தினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று 06 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை வரை மூன்று நாட்களில் எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.
இன்று இரண்டாம் நாள் இடம்பெறவுள்ள நான்காம், ஐந்தாம், ஆறாம் அமர்வுகளில் ஆயிரத்து 192 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.










மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan