சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த பலர் சிக்கினர்
நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இயந்திர படகு ஒன்றின் மூலம் சென்ற அவர்களை தென்கிழக்கு கடலில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை பாணமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினரின் சுற்றிவளைப்பு
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்டபோது சட்டவிரோதமாக பயணித்த 36 பேர் சிக்கினர்.

இதனையடுத்து கடலில் இருந்து படகை வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்வர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri