மஹரகம மருத்துவமனையில் 36,000 புற்று நோயாளிகள்
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதே காலகட்டத்தில் மருத்துவமனையில் 6,700 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதியமைச்ச ஹன்சக விஜேமுனி, மருத்துவமனையில் தினசரி 950 முதல் 1,000 நோயாளர் வரை மருத்துவ சிகிச்சைக்காக வருகை தருவதாகக் குறிப்பிட்டார்.
பிற மருத்துவ உபகரணங்கள்
வைத்தியசாலையினால் நிர்வகிக்கப்படும் வங்கிக் கணக்குக்கு நன்கொடையாக 2020 ஆம் ஆண்டில் ரூ. 242 மில்லியன், 2021 இல் ரூ. 280 மில்லியன், 2022 இல் ரூ. 337 மில்லியன், 2023 இல் ரூ. 406 மில்லியன், 2024 இல் ரூ. 461 மில்லியன் மற்றும் 2025 ஆம் ஆண்டில் இதுவரை ரூ. 478 மில்லியன் கிடைத்துள்ளது.
இந்த நிதி மருத்துவமனையால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற போதிலும் அதிலுள்ள நிதி இதுவரை பயன்படுத்தப்படவில்லை.
கொள்முதல் செயல்முறை தற்போது நடைபெற்று வரும் நிலையில், புதிய CT ஸ்கேனரை வாங்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மீதமுள்ள தொகை மருத்துவமனைக்கு தேவையான பிற மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்குச் செலவிடப்படும் என்று பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




