நாட்டில் 352 துப்பாக்கிகள் பறிமுதல்!
நாட்டில் இந்த ஆண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது T-56 ரக துப்பாக்கிகள் உட்பட 352 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் சஞ்சீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (15.2.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 11 T-56 ரக துப்பாக்கிகள், 12 கைத்துப்பாக்கிகள், 7 ரிவால்வர்கள் மற்றும் 322 பிற வகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
இதேவேளை, ஜிந்துப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்திற்குள் நேற்று(14.2.2026) இரவு உள்நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதன்போது ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மன்னாரைச் சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri