34ஆம் வீரமக்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு (Photos)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34வது வீரமக்கள் தின அனுஷ்டிப்பு நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்த அனுஷ்டிப்பு இன்று (16.07.2023) கோயில்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நினைவிடத்தில் இடம்பெற்றுள்ளது.
அமைப்பின் உபதலைவர் ராகவனால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மறைந்த தலைவர் உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தாத்தனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் க. சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.














உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri