மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 341 மில்லியன் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் இந்த வருட வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 341 மில்லியன் ரூபாய் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்திற்கான பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்து இருக்கின்ற நிதியை பயன்படுத்தி இந்த பிரதேசத்திற்கான கிராமிய வீதிகள், வீடமைப்பு வசதிகள், வாழ்வாதார உதவி திட்டங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான செற்றிடங்கள், பயிற் செய்கைகளுக்கான உதவிகள் போன்ற பல விடயங்களுக்காக நிதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
வேலைத்திட்டங்கள்
போக்குவரத்து பிரச்சனை, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி, களுவாஞ்சிகுடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல மருந்து விநியோக கட்டடத்தினை திறப்பதற்குரிய நடவடிக்கை, போன்ற பல விடயங்களை நாம் ஆராய்ந்திருந்தோம்.

தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் எந்த பிரதேசமாக இருந்தாலும் அதற்கான நிதிகளை வழங்கி அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் முன்னின்று செயற்படுவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri