எகிப்தில் பாரிய வாகன விபத்து...! தீப்பற்றி எரிந்த வாகனங்கள்: 32 பேர் உயிரிழப்பு
எகிப்தில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகியதுடன் 63 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து இன்று (28.10.2023) எகிப்தில் உள்ள பெஹெய்ரா எனும் இடத்தில் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பல வாகனங்கள் மோதிக்கொண்டதாகவும் அவற்றில் சில தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு நடவடிக்கைகள்
விபத்து நடந்த இடத்திற்கு 20 நோயாளர்காவு வண்டிகள் அனுப்பப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் சாலைகள் மோசமான நிலையில் காணப்படுவதுடன் நெடுஞ்சாலை குறியீடு பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.
எனவே அந்நாட்டில் இவ்வாறான விபத்து பெரும்பாலும் ஏற்பட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந் நாட்டு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
