இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள்
2024 முதல் 2026 வரை சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 32 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (18) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலதிக விசாரணை
மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான 'கரன்தெனிய ராஜு' என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக இலங்கையிலுள்ள நீதிமன்றங்களால் 15 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, 26 வெளிநாட்டுப் பயணத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. மீட்டியாகொட, கரன்தெனிய, பலப்பிட்டிய மற்றும் தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள், பாரிய காயங்களை ஏற்படுத்தியமை, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்காக இவர் தேடப்பட்டு வந்தவராவார்.

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள்
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் நேரடி மேற்பார்வையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை 2024 முதல் 2026 வரை சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 32 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மேலும் 15 பேர் சர்வதேச ஒத்துழைப்புடன் அழைத்து வரப்படவுள்ளதுடன், சர்வதேசக் காவலில் உள்ள 8 பேரை விரைவில் நாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் 94 சிவப்பு அறிவித்தல்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam