சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் 31 அரசியல்வாதிகளிடம் விசாரணை
சட்டவிரோதமான முறையில் சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் 31 அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மேற்கொண்டதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்தமை தொடர்பில் கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த 31 அரசியல்வாதிகளிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல்வாதிகள் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் அவற்றை நீதிமன்றின் ஊடாக தடை செய்து பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்தவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam