கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில்...
வடபகுதி கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பருத்திதுறை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை நேற்று(03) பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
குறித்த 31 பேரும் 3 படகுகளுடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 4 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட
குறித்த நால்வர் தொடர்பில், சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், சந்தேகம் தீர்க்கப்பட்ட நிலையில், நாளைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 40 படகுடன் 310 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |