தமிழரின் பகுதியில் 3000ம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுத் தடயம்! (VIDEO)
யாழ்ப்பாண பிரதேசமானது தனக்கென ஒரு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தினைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது.
பல்லினப் பண்பாட்டுக்குரிய சமூகத்தினரை உள்ளடக்கியுள்ள இப் பிரதேசத்தில் அனைத்துப்பண்பாட்டுக் கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய வகையில்பிராந்திய அரசு ஒன்று வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் அவ்வரசு தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவே நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்பட்டது. இது யாழ்ப்பாணக் குடாநாடு தொடக்கம் வன்னி சிற்றரசுகளையும் உள்ளடக்கியிருந்தது.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கான இலக்கிய – தொல்லியல் சான்றுகள் இற்றைவரை மிக அரிதாகவே காணப்படுகின்றன.
அந்த வகையில், பூநகரிக் கோட்டை இலங்கையில், வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் பூநகரி என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்திருந்த ஒரு சிறிய கோட்டை ஆகும்.
கரையோரத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேல் தொலைவில் உட்புறமாக அமைந்திருந்த இக் கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் எதுவும் நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பது இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் கோட்டைகளைப் பற்றி ஆராய்ந்து நூல் எழுதிய நெல்சன் என்பவரின் கருத்தாகும்.
அந்த வகையில்,யாழ்.கொழும்புத்துறைக்கும்,பூநகரிக்கும் இடையிலான 3000 ம் ஆண்டுகள் பழமையான தடயம் தொடர்பிலான முக்கிய தகவல்களை எம்முடன் முருகவேல் பூநகிரி பொன்னம்பலம் (Murugaverl Poonagari Ponnampalam) பகிர்ந்துக்கொண்டுள்ளார் .
இது தொடர்பிலான விசேட தொகுப்பினை சுமந்து வருகின்றது எழுதும் கரங்கள் விசேட தொகுப்பு,