சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற தயாராகும் 300 அமைப்பாளர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 300 அமைப்பாளர்கள் குமார வெல்கமவுடன் இணைவதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமாரவெல்கம தலைமையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் (நவலங்கா நிதாஸ் பக்சய) கட்சியின் தலைமைக்காரியாலயம் எதிர்வரும் மார்ச் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறக்கப்படவுள்ள நிலையில்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி குமார வெல்கமவுடன் இணைவதற்கு 300 அமைப்பாளர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், ரொரிண்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இல்லத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது குமாரவெல்கம தலைமையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் (நவலங்கா நிதாஸ் பக்சய) முக்கிய பதவிகளில் அர்ஜுண மற்றும் சுசில் ஆகியோரை நியமிப்பதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, அர்ஜுண ரணதுங்கவிற்கு பொருளாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவியை வழங்குமாறும், பொதுச்செயலாளர் பதவியில் சுசிலை அமர்த்துமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் இருவரும் உடனடியாக அப்பதவிகளைப் பெற்றுக்கொள்வதாக இணக்கம் வெளியிட்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மேலும், தமது கட்சியின் அமைப்பாளர்கள் யாரும் குமார வெல்கமவின் கட்சியில் இணைய முயற்சிகளை கொண்டிருக்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan