யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் விளைவே கடந்த 30 வருட கால யுத்தம்
தமிழர் வாழ்வில் 1981ஆம் ஆண்டு ஜூன் 01ஆம் திகதி மறக்க முடியாத நாளாக உள்ளதோடு அகில உலக கல்விச்சமூகமே வெட்கித்தலை குனிந்த நாள்.
குறித்த நாளில் தான் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்ட நாள்.
அந்த காலப்பகுதியில் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்க மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் காடையர் கூட்டத்தை கொண்டு வந்து பொது நூலகத்தை எரித்து 93000இற்கு மேற்பட்ட புத்தகங்களையும் கிடைப்பதற்கு அரிதான ஓலைச்சுவடிகளையும் எரித்து எமது உணர்வுகளைத் உதாசீனப்படுத்தினார்கள்.
கல்வியில் தரப்படுத்தலின் அடிப்படையில் கை வைத்தார்கள்.அதன்பின் எமது கல்வித்தாய் மீது கைவைத்தார்கள். அன்று எமது இளைஞர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள் .
இதன் விளைவாக உருவானதே கடந்த 30 வருட கால விடுதலைப் போராட்டம். ஆனால் இன்றைய சூழலில் தமிழ் மக்களாகிய எமக்கு சந்தர்ப்பம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பௌத்த பேரினவாதத்திற்கு ஓர் அடியாக நடைபெறவுள்ள தேர்தலிலே தேசத்துரோகிகளுக்கு வாக்களிக்காமல் கருங்காலிகளை முதலில் சமூகத்திலிருந்து களைவதற்கான சூழல் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |