பேரறிவாளன் கைதாகி 30 ஆண்டுகள் நிறைவு! தொடரும் நீதிக்கான போராட்டம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் தொடர்பில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோளுடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“தொடர் ஓட்டம்,வரலாற்றில் இல்லா போராட்டம், என பலரும் எனை சுட்டி பேசும்போது, மூப்படைந்த என் ரத்த ஓட்டமும் தேய்ந்துபோன என் எலும்புகளும் உயிர்வலியுடன் வேகமெடுக்கும். இப்போராட்டத்தின் முடிவு நீதியின் வெற்றியாகவேண்டும் என ஒற்றை இலக்கே காரணம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தொடர் ஓட்டம்,வரலாற்றில் இல்லா போராட்டம், என பலரும் எனை சுட்டி பேசும்போது, மூப்படைந்த என் ரத்த ஓட்டமும் தேய்ந்துபோன என் எலும்புகளும் உயிர்வலியுடன் வேகமெடுக்கும். இப்போராட்டத்தின் முடிவு நீதியின் வெற்றியாகவேண்டும் என ஒற்றை இலக்கே காரணம்.#31YearsOfInjusticehttps://t.co/ngnrJspItl
— Arputham Ammal (@ArputhamAmmal) June 11, 2021
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர்.
அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, அவர்களது விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்த தமிழக ஆளுநர், எழுவரை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் உள்துறை மூலம் அறிக்கை அளித்துள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஏழு பேர் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
“பேரறிவாளன் கைதாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இருள் விலகி ஒளி பிறப்பது எப்போது? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
