வவுனியாவில் 30 வயதுடைய இளைஞர் மாயம் : உதவிகோரும் குடும்பத்தினர்
வவுனியா - தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த நான்கு நாட்களாகக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் கடந்த 27 ஆம் திகதி வவுனியா குருமன்காடு பகுதிக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
எனினும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கடந்தும் குறித்த இளைஞர் வீட்டிற்கும் வராத நிலையில், அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணன் நிரேஸ் (வயது 30) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0778013692, 0771014446 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரியப்படுத்துமாறு அவர்களது குடும்பத்தினரால் உதவி கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.





மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

தவெக கேட்ட இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் News Lankasri
