கம்பஹா வைத்தியசாலை மருத்துவர்களின் அசமந்த போக்கு: நஷ்டஈடு அறவிட்ட நீதிமன்றம்
கம்பஹா வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால், குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் 30 மில்லியன் ரூபா நஷ்டஈடு நேற்று (29.10.2022) பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
பிரசவத்திற்கு முன்னர் அதிக வலி ஏற்பட்டதாக எழுந்த முறைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டதும், முறைப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமை மற்றும் தேவையான சோதனைகளை மேற்கொள்ளத் தவறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மேலதிக மாவட்ட நீதிபதி கல்ஹாரி லியனகே, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு

குழந்தையின் தாயான பியகம பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் சட்டமா அதிபர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குழந்தை கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் அன்று பிறந்துள்ளது. எனினும் உடல் சிக்கல்களின் விளைவாக குழந்தைக்கு பேசவோ நகரவோ முடியவில்லை.
மருத்துவ செலவீனம் தொடர்பில் கவனம் செலுத்திய நீதிபதி

இதன் காரணமாக அதற்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 50,000 ரூபாய் மருத்துவச் செலவுக்கு செலவிடப்படுகிறது என்பதை மாவட்ட நீதிபதி கவனத்தில் கொண்டு இந்த நஷ்டஈட்டை செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 16 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri