மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 30 இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30 இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் குறித்த கடற்றொழிலாளர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சிறைத்தண்டனை
இதனையடுத்து,நேற்றையதினம்(6) குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 கடற்றொழிலாளர்களுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மூன்றாவது குற்றச்சாட்டிற்காக தலா 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், கடற்றொழிலாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளின் உரிமையாளர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி (19-02-2026) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.
படகு தவிர்ந்த ஏனைய சான்று பொருட்களை அரச உடமையாக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan