கொழும்பில் வீடொன்றை அதிரடியாக சுற்றிவளைத்த பொலிஸார் - பல வெளிநாட்டவர்கள் கைது
கொழும்பின் புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்து நிதிமோசடி குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிசர இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி, இணையதளம் ஊடாக சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டினர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பொரலஸ்கமுவ பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்த போது கல்கிஸ்ஸ குற்றப்பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டனர்.
வெளிநாட்டவர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்களில் 21 சீன நாட்டவர்களும் 9 வியட்நாம் நாட்டவர்களும் அடங்குவர். இவர்களிடமிருந்து 10 மடிக்கணினிகள், 29 அப்பிள் ரக கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய வசதிக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி இதேபோன்ற குற்றத்திற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் 152 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒரு குழுவினரே நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிசர முகாமில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பியோடி மீண்டும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
சந்தேக நபர்கள் பொபொரலஸ்கமுவ 10ஆம் மைல் கல் பகுதியில் உள்ள இருமாடி கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தை மாதத்திற்கு 15 லட்சம் ரூபாய் வாடகைக்கு எடுத்து இந்த இந்த மோசடியை முன்னெடுத்து வந்துள்ளனர்.

மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், இவர்கள் சில நாட்களுக்கு முன்னரே இவ்விடத்திற்கு வந்துள்ளமை தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் எவரிடமும் செல்லுபடியாகும் விசா அல்லது கடவுச்சீட்டு இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிசை கோட்டை குற்ற விசாரணைப் பணியகத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam