கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்காகி 3 வயது சிறுவன் பலி
மாத்தளை - உக்குவளை லேலி அம்ப பிரதேசத்தில் தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
3 வயது சிறுவன் பலி
நபரொருவர் சிறுவர்களின் தாயையும் பிள்ளைகளையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் இதன்போது அவர்களின் தந்தை தொழிலுக்குச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் லேலி அம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும் பலத்த காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் என்றும் தெரியவந்துள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
