வெளிநாடொன்றில் ஏற்பட்ட விபத்தில் 3 இலங்கையர்கள் பலி
சவுதி அரேபியாவின், தமாம் நகரத்தில் இடம்பெற்ற எரிவாயு விபத்தில் 3 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் ஒருவரின் சடலம் நேற்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த ஏனைய இரு இலங்கையர்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த போது, கடந்த ஜனவரி 27ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர்கள் தனிப்பட்ட செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இலங்கையருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பில் தூதரகங்கள் தொடர்ந்தும் ஆராயும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது  
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        