யாழ்.போதனா வைத்தியசாலையில் மூவர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று(25.052024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
குறித்த சந்தேகநபர்கள், வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடும் நேரம் முடிந்த பின்னர் தம்மை உள்நுழைய அனுமதிக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து மதுபோதையில் குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri