துரத்தித் துரத்தி மூவர் மீது வாள் வெட்டு தாக்குதல் - ஒருவர் பலி - இருவர் படுகாயம்
இரத்தினபுரியில் வாள்வெட்டுத் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஹெலியகொட பொலிஸ் பிரிவின் நெதுர சந்திப்பில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டுக்கு உள்ளானதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வாள் வெட்டு தாக்குதல்
எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் இடமல்கொட பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் எஹெலியகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றச்சொயலில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
