பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 3 பேர் கைது
மட்டக்களப்பு - கரடியனாறு வயல் பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிளை சோதனை செய்ய பொலிஸார் முயன்றபோது கடமையை செய்யவிடாது தடுத்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரு பொலிஸார் சிவில் உடையில் வீதியால் சென்று கொண்டிருந்த போது வயல் பகுதி வீதி ஓரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தி இருப்பதினை கண்டு அதனை பரிசோதனை செய்வதற்காக சென்றுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சென்ற நிலையில், அங்கு இருந்த பொதுமக்கள் ஒன்றுகூறியதையடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.டி.எஸ். திசநாயக்க மேலதிக பொலிஸாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பங்குடாவெளியைச் சேர்ந்த 55 வயது, 25 வயது, 31 வயதுடைய 3 பேரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனேடிய மற்றும் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஆன்டிபயாட்டிக்: பயனுள்ள ஒரு தகவல் News Lankasri