மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் பிரபல வியாபாரி உட்பட 3 பேர் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்று (21.02.2024) அதிகாலை வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையிலாக பொலிஸ் குழுவினர் வாழைச்சேனை பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது அங்கு போதை பொருளுக்கு அடிமையான இருவர் பிரபல வியாபாரியிடம் போதை பொருள் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கில் அங்கு சென்ற வியாபாரி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கண்காணிப்பில் மாறு வேடத்தில் இருந்த பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.
இதன் போது வியாபாரியிடம் இருந்து 4 கிராம் ஐஸ்போதை பொருளையும், ஏனைய இருவரிடமிருந்து ஒன்றரைக்கிராம் , மற்றும் 200 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருள்களையும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam