வெற்றிலைக்கேணியில் பனைமரம் கடத்திய மூவர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் அதிகளவான பனைமரத்தை கடத்த முற்பட்ட மூவர் மருதங்கேணி பொலிசாரால் நேற்று(7) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் பனைமரங்கள் அழிக்கப்பட்டு வெளி இடங்களுக்கு பனைமரங்கள் அதிகளவாக கடத்தப்படுவதாக மருதங்கேணி பொலிசாருக்கு அதிகளவான முறைப்பாடு கிடைத்திருந்தது.
கைது
இதனடிப்படையில் விசாரணையை மேற்கொண்டிருந்த பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று (7) இரவு குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.

குறித்த சுற்றிவளைப்பில் அனுமதி பத்திரம் இன்றி பனைமரத்தை கடத்துவதற்காக மறைத்துவைக்கப்பட்ட பனை மரங்களை கண்டறிந்ததுடன் அதனுடன் தொடர்புடைய மூவரை மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.