மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் மூவர் கைது
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(1) இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த வீரசிங்க, திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த பண்டார மற்றும் முகாமைத்துவ சேவை உதவியாளர் தம்மிக்க நிரோஷன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவர் கைது
சுங்கத் தீர்வை செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ப்ராடோ ரக வாகனம் ஒன்றை சட்டத்துக்குப் புறம்பான முறையில் மோட்டார் வாகனத்திணைக்களத்தில் பதிவு செய்ய உதவியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று மாலைக்குள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
