கிளிநொச்சியில் 3 லட்சம் பெறுமதிக்கு மேலான பொருட்கள் திருட்டு (video)
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தையில் அமைந்துள்ள வெற்றிலை வாணிபம் ஒன்றில் இன்று (11.02.2023) அதிகாலை 3 லட்சம் ரூபாவிற்கு மேல் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவத்தில் பெறுமதியான வானொலிப்பெட்டி ஒன்றும் இரண்டு லட்சத்துக்கு அதிகமான விலையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த புகையிலை மற்றும் வெற்றிலை பீடி போன்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில்,
பெறுமதியான பொருட்கள் திருட்டு
நேற்றைய தினம் (09.02.2023) தனது வர்த்தக நடவடிக்கைகளை முடித்து கடையை பூட்டி விட்டு வீடு சென்றதாகவும் இன்று அதிகாலை 5 மணியளவில் வழமை போன்று கடையினை திறப்பதற்காக சென்ற போது, கடையின் முற்றத்தில் நின்ற இருவர் தன்னை கண்டவுடன் அப்பகுதியிலிருந்து ஓடிச் சென்றுள்ளனர்.
பின்னர் கடையினை திறக்க முற்ப்பட்ட பொழுது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறதை அவதானித்ததாகவும் தொடர்ந்து கடையினை திறந்து பார்த்தபொழுது அங்கு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருட்டுத் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.