வடக்கு கடலில் தத்தளித்த மூன்று கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் மீட்பு
மோசமான வானிலை காரணமாகப் படகு செயலிழந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று கடற்றொழிலாளர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஒரு கடற்றொழில் படகு ஆபத்தில் இருப்பதாக மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்திலிருந்து கொழும்பில் உள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு ( MRCC) விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
உடனடியாகப் பதிலளித்த கடற்படை, ஜூன் 6 முதல் ஜூன் 7 வரை இரண்டு நாட்களுக்குத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொள்வதற்காகக் கப்பல்களை அனுப்பியது.
மீட்பு நடவடிக்கை
அதன் பிரதிபலனாக கடற்படை வீரர்கள் அனலைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியிருந்த கடற்றொழில் படகையும் அதன் மூன்று கடற்றொழிலாளர்களையும் கண்டறிந்து, கடற்றொழிலாளர்களைக் காயமின்றிப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

செயலிழந்த கடற்றொழில் படகைப் கரைக்குத் திரும்பக் கொண்டுவர, கடற்படை இழுத்துச் செல்லும் உதவியையும் கடற்படையினர் வழங்கியுள்ளனர்.
இலங்கையின் தேடுதல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் (SRR) இயங்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் பிற கடல்சார் சமூகத்தினருக்கு ஏற்படும் அவசரநிலைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கும் வகையில், இலங்கை கடற்படையானது கொழும்பு MRCC உடன் ஒருங்கிணைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை