யாழில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் தொற்று! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
‘‘யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு‘‘ யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் நிலைமை தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வினவியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார நெறிமுறைகளை பேண வேண்டும்

‘‘கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடந்த காலங்களில் பின்பற்றிய நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும். இதேவேளை வெளியே செல்லும்போது முகக் கவசங்களை அணிந்து தனிநபர் இடைவெளியை பேண வேண்டும்.
சவர்க்காரமிட்டு கைகளை சுத்தமாக கழுவி அநாவசியமாக கை குலுக்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இயன்ற அளவு கூட்டமாக ஒன்று சேர்வதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற செயற்பாடுகளை மக்கள் கருத்திற்கொண்டு அனைவரும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்‘‘ என தெரிவித்துள்ளார்.

மூவருக்கு கோவிட் தொற்று உறுதி
மேலும், யாழ்ப்பாணத்தில் இன்று (15.04.2023) மூவர் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri