முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு ஊழல் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு
ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மூன்று வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
குறித்த வழக்குகள் 2025ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
நிதி மோசடி
இந்த மூன்று வழக்குகளில் முதல் வழக்கு 3,000 வெசாக் வாழ்த்து அட்டைகள் அச்சிடப்பட்டதன் காரணமாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு 128,520 ரூபாய் நட்டம் ஏற்பட்டமைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வழக்கு, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளை தவறாக வழிநடத்தி ரூ. 360,000இனை ஒரு தனியார் நிறுவனத்திற்கு செலுத்தியமையால் நட்டம் ஏற்பட்டமைக்காக தொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றைய வழக்கு, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, சிலாபம் தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு 494,000 ரூபாய் செலுத்தியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |