மாகாண சபைத் தேர்தலில் தொகுதிக்கு 3 வேட்பாளர்கள்! - ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு
மாகாண சபைத் தேர்தலில் கட்சியொன்றின் 3 வேட்பாளர்களைத் தொகுதிக்கு முன்னிறுத்தும் யோசனையை நிராகரிப்பதற்கு ஆளும் கட்சியின் சில பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற ஆளும் கட்சியி ன் பங்காளிக் கட்சிகளின் கலந்துரையாடலின் போதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறாயினும், ஏப்ரல் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
