கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பேருந்துகள் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மூன்று அதி சொகுசு பேருந்துகள் பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த பேருந்துகள் நேற்று இரவு கரடியனாறு பொலிஸ் பிரிவில் வைத்து பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பேருந்தின் சாரதி, நடத்துனர் உள்ளிட்ட 49 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
