ஆளில்லா கமராவை அனுமதியின்றி பறக்கவிட்ட பெண் உட்பட மூவர் கைது
விக்டோரியா நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில் ஸ்ரோன் கமராவை பறக்கவிட்டு ஒளிப்பதிவு செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று காலை விக்டோரியா நீர்வீழ்ச்சி மற்றும் காலாட்படை பிரிவு முகாமுக்கு அண்மித்த பகுதியில் ஸ்ரோன் கமராவை பறக்கவிட்டு ஒளிப்பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொல்தெனிய காவல்துறைக்கு இராணுவ அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொத்தடுவ மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் மூவரும் தொல்தெனிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri