கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டுவந்து விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவர் கைது
சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டு வந்த பிரபல தொழிலதிபரும் அவரது உதவியாளரும் டுபாயிலிருந்து ப்ளைடுபாய் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

சந்தேக நபர்கள் 05 சூட்கேஸ்களை கொண்டு வந்ததாகவும், அவற்றில் 60,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 300 சிகரெட் அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சிகரெட் கையிருப்பின் மதிப்பு 9 மில்லியன் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் கம்பளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam