வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு: மூவர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும், நேற்றையதினம் (11.05.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பினால் இவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவக்கைக்காக வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இடம்
இவர்களிடமிருந்து 270 லீற்றர் கசிப்பும் 9 கோடா பரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிரவெளி அம்பந்தனாவெளி களப்பு பிரதேசத்தில் வைத்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan