ஈரானில் 32 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு : ஐ.நாவின் அதிர்ச்சித் தகவல்
ஈரானில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் மோதல்கள் காரணமாக, அந்நாட்டிற்குள் சுமார் 32 இலட்சம் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகாம் (UNHCR) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா அதிகாரி அயாகி இடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 6 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையிலான ஈரானியக் குடும்பங்கள் பாதுகாப்பு தேடி தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திடீர் மனிதாபிமான நெருக்கடி
குறிப்பாக, தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் வசித்து வந்த மக்கள், உயிர்ப் பயம் காரணமாக நாட்டின் வடக்குப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை நோக்கித் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
மோதல்கள் நீடிக்கும் பட்சத்தில், இந்த இடம்பெயர்வு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலில், ஏற்கனவே ஈரானில் தஞ்சமடைந்திருந்த ஆப்கானிஸ்தான் அகதிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
போதிய ஆதரவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஈரானிய அதிகாரிகளுடன் இணைந்து அகதிகள் முகமை தனது மீட்பு மற்றும் உதவிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு தேடி வருபவர்களுக்காக எல்லைகளைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது. இந்தத் திடீர் மனிதாபிமான நெருக்கடி மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam