முல்லைத்தீவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயம்
முல்லைத்தீவு(Mullaitivu) - மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று(02.07.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வாள்களுடன் இரண்டு வீடுகளுக்கு சென்ற குழுவினர் குறித்த வீட்டில் இருந்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு வாள் வெட்டில் படுகாயமடைந்த இருவரும் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri