யாழ்.பூனைத்தொடுவாயில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29 ஆவது நினைவேந்தல் (video)
பூனைத்தொடுவாய் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை,படுகொலை செய்யப்பட்ட 10 பேரின் 29 ஆவது நினைவேந்தல் இன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இடம்பெற்றுள்ளது.
1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்-வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைத்தொடுவாய் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கடலில் வைத்து 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
29 ஆவது நினைவேந்தல்
கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவர் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில், சென்மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகத்திற்கும், கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் சினேகபூர்வ விளையாட்டும் இடம்பெற்றுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
