காசாவில் அதிகரித்துள்ள போர் பதற்றம் : இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலி
காசா(Gaza) முனையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல்(Israel) இராணுவம் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இவர்களில் 5 பேர் பத்திரிகையாளர்கள் எனவும், குறித்த தாக்குதலில் 100 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள தகவல்
சர்வதேச அளவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையிலும், இஸ்ரேல் இராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் இதுவரை மொத்தம் 38,098 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளதாகவும். 87,705 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதாரத்துறை மேலும் கூறியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 20 மணி நேரம் முன்
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam