29 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்பு
29 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் தடுப்பு விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பில், 29 கிலோ ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போதைப் பொருட்கள் மீட்பு
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 42 வயதான நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
திக்கவெல்ல, ஊருகமுவ பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு, இதற்குப் பின்னணியில் செயல்படும் போதைப்பொருள் வலையமைப்பை கண்டறிய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam