இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிக்கிய 28 வயது இளைஞர்
திருகோணமலை - ஜமாலியா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த இளைஞரிடமிருந்து 5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய ஜமாலியா பகுதியைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான்
முன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam