கொழும்பில் நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்ட 27 பேர் அதிரடியாக கைது
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக 27 பேரை மருதானை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று பிற்பகல் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் மற்றவர்களும் இதில் இணைந்தனர்.
ஆர்ப்பாட்டம்
அங்கு, 8 பிரதிநிதிகள் சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடினர். ஆனால் அது பலனளிக்காததால், அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்தனர்.
தடை உத்தரவு
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்தனர். அதன்படி, மருதானை பொலிஸ் பிரிவில் உள்ள மருத்துவமனை சதுக்கம், சுகாதார அமைச்சு மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் டீன்ஸ் வீதி, டி சேரம் வீதி, ரீஜண்ட் வீதி மற்றும் தேசிய மருத்துவமனை சதுக்கத்தை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் நடைபாதைகளை தடுப்பதையும், போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதையும், சுகாதார அமைச்சின் முன்னால் நிற்பதற்கும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலதிக தகவல் - இந்திரஜித்

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
