ஆனையிறவு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை (Photos)
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் ஆனையிறவு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் நிர்மாணிக்கப்பட்ட நடராஜர் சிலையினை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு இன்றைய தினம் (12.03.2023) நடைபெற்றுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள ஆனையிறவு பகுதியில் பிரதான வர்த்தக மையம்,
பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிலையம், நவீனகுளியலறை, விளையாட்டு முற்றம், மற்றும்
கடற்கரை உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய
ஆனையிறவு வணிக சுற்றுலா மையம் நிறுவப்பட உள்ளது.
இதன் மூல திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்ட பணிகள் நிறைவு பெற்று அங்கு நிறுவப் பெற்ற சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனையிறவு வீர மண்
குறித்த நிகழ்வில் இந்து மத சிவாச்சாரியார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதிராஜா மற்றும் பக்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
விசேடமாக 27 அடி உயரமான நடராஜர் சிலை ஆறடி உயரமான பீடத்தில் ஏற்றி கிளிநொச்சி ஆனையிறவு வீர மண்ணுக்கு அழகு சேர்க்கிறமை குறிப்பிடத்தக்கது.