டெல்லியில் தீவிபத்து! 27 பேர் சடலங்களாக மீட்பு (Video)
இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீவிபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் முண்ட்காவில் உள்ள அலுவலக கட்டிடத்தில் இன்று மாலை 4.45 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி பொலிஸாரின் கூற்றுப்படி, குறித்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கட்டிடத்தில் இன்னும் மக்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக டெல்லி பொலிஸார் கூறியுள்ளார்.
"தீயை அணைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன, அப்பகுதியின் பரப்பளவைக் கருத்தில் கொண்டு அதற்கு நேரம் எடுக்கும்" என்று துணைத் தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட போது உள்ளூர் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலுவலக கட்டிடத்தின் ஜன்னல்களை உடைத்து உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
