அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 26பேர் பாதிப்பு
இன்றையதினம் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/203 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5பேர் மின்னல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஜே/191 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7பேர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பலத்த காற்று
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/141 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த ஏழுபேர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுளள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன் ஜே/150 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும், சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/180 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri