இலங்கையின் இரத்தினங்கள் துபாய் கண்காட்சியில்
துபாயில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 நீலக்கற்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
துபாயில் நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் சந்தித்தனர்.
இலங்கையின் நீல கற்களுக்கு (Blue Sapphires) காணப்படும் உலகளாவிய கேள்வியை கருத்திற்கொண்டு நீலக்கற்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.
அதன்படி, முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேருக்கு சொந்தமான விலைமதிப்பற்ற 25 நீலக்கற்கள் சஃபாயர் தினத்தன்று துபாயில் உள்ள இலங்கை கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இக்கண்காட்சியின் போது இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட சஃபாயர் ஸ்ரீலங்கா (Sapphire Sri Lanka) எனும் சிறப்பு காணொளி காட்சிபடுத்தப்படவுள்ளதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan