சாவகச்சோியில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு தொற்று உறுதி
யாழ். சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வரணியில் சமுர்த்தி வங்கி ஊழியர் ஒருவர், பனை அபிவிருத்திச் சபை ஊழியர்கள் உட்பட்ட 17 பேருக்கு வரணிப் பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாவகச்சேரிப் பகுதியில் எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் தென்மராட்சி கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க சிற்றுண்டிச்சாலையின் ஊழியர் ஒருவர், கைதடி முதியோர் இல்லத்தில் பணியாற்றும் ஒருவர், பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் தேர்த்திருவிழாவில் பங்கேற்றிருந்த நிலையில் அங்கு தொற்றாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கிருந்து வந்து கைதடிப்பகுதியில் தங்கியிருந்த இளைஞர் உட்பட்டவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க சிற்றுண்டிச்சாலை நகரின் பெருமளவான வர்த்தகர்களும் ,மக்களும் சென்று வருகின்ற சிற்றுண்டிச்சாலை என்பதால் அங்கு சென்று வருபவர்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
குறித்த சிற்றுண்டிச்சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
