யாழில் 16 பவுன் தங்க நகைகள் மீட்பு: இரு சந்தேக நபர்கள் கைது
யாழ். (Jaffna) சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல்வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
அந்த வீட்டிலுள்ள கணவன் - மனைவி ஆகிய இருவரும் பணிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் திருட்டு இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பணம், நகை மீட்பு
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு கமராவின் (Security Camara) ஆதாரத்துடன் சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார் நேற்றைய தினம் (15) சந்தேக நபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள் இருவர் மற்றும் மேலுமொருவர் உட்பட ஐவரைக் கைது செய்துள்ளனர்.
அத்தோடு உருக்கப்பட்ட நிலையில் நகைகளும், சந்தேக நபர்களான பெண்களிடம் இருந்து நகை விற்றதாக சந்தேகிக்கப்படும் 7இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை விற்ற பணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடம்பர மின் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |