இவர் தொடர்பான தகவல் வழங்கினால் 25 லட்சம் ரூபாய் சன்மானம்: பொலிஸார் அறிவிப்பு
நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா என்ற குற்றவாளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
முனியபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 9 ஆம் திகதி முதல் தலைமறைவாகியுள்ளார்.
சன்மானம் அறிவிப்பு
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு - 071 8591960
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நிலையத் தளபதி பிரிவு (1) - 0718596150





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
